செஸ் போட்டி : உலக சாம்பியனை 2-வது முறையாக வீழ்த்தினார் தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா

chess3

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் என்ற ஆன்லைன் அதிவேக செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், 16 வீரர்கள் கலந்துகொண்டு செஸ் ஆடி வருகின்றனர்.

இதில், 5-வது சுற்றில் தமிழ்நாட்டை சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தா, உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். 

இந்த போட்டி சமனில் முடிய இருந்த நிலையில், 40-வது சுற்றுக்கு பிறகு கார்ல்சன் செய்த ஒரு தவறினை புரிந்துகொண்ட பிரக்ஞானந்தா, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காய்களை சரியாக நகர்த்தி வெற்றி பெற்றார். 

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற போட்டியிலும் பிரக்ஞானந்தா 3-0 என்ற கணக்கில் கார்ல்சனை வீழ்த்திய நிலையில், இந்த ஆண்டில் 2-வது முறையாக கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார்.

போட்டியின் 2வது நாள் முடிவில் பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளார். கார்ல்சன் 15 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

சீனாவின் வேய் யி 18 புள்ளிகளுடன் முதலிடத்திலும், டேவிட் ஆண்டன் 15 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
*

Share this story