ரவி சாஸ்திரி போல வருகிறார், ஹர்த்திக் பாண்ட்யா : கவாஸ்கர் கருத்து
 

gavaskar

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் உலக கோப்பையில் ஆல்-ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

உலக கோப்பை போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா இந்தியாவுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார். 1985-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலக சாம்பியன் ஷிப் போட்டியில் ஆல் ரவுண்டர் ரவி சாஸ்திரி இந்தியாவுக்காக சாதித்தது போல் ஹர்த்திக் பாண்ட்யாவால் செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.

ரவி சாஸ்திரி பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டார். அது போன்று செய்வதில் ஹர்த்திக் வல்லவர். ஹர்த்திக் பாண்ட்யா முதுகு காயத்திலிருந்து மீண்டு வந்து சில மாதங்கள் ஆகிறது.

எனவே அவரை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மூலம் மேட்ச் வின்னராக இருப்பார். அவரது பீல்டிங்கும் அபாரமாக இருக்கிறது.

ரன் அவுட் செய்வதும் ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பும். 1985-ம் ஆண்டில் ரவி சாஸ்திரி போல் ஹர்த்திக் பாண்ட்யா செயல்பட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

1985-ம் ஆண்டு நடந்த சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இத்தொடரில் ரவி சாஸ்திரி 5 ஆட்டத்தில் 182 ரன்னும், 8 விக்கெட்டும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story