காமன்வெல்த் பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்கு முந்தினார் பி.வி.சிந்து..

By 
common9

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. 

இந்த காமன்வெல்த் போட்டியில் 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து சிங்கப்பூரின் யோ ஜியா மின் ஆகியோர் மோதினர். 

இந்த ஆட்டத்தில் 21-19, 21-17 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் யோ ஜியா மின்னை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறி வெள்ளி அல்லது தங்கப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
*

Share this story