காமன்வெல்த் விளையாட்டு : இன்று, இந்தியா பங்கேற்கும் போட்டிகள் விவரம்..

By 
common

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 

அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடியை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து இந்திய ஆக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் ஏந்தி சென்றனர். 

72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரம் வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். மொத்தம் 20 விளையாட்டுகளில் 280 பந்தயங்கள் நடக்கிறது. 

இந்திய அணியில் 215 வீரர்-வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். 16 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது.

இன்று இந்தியா பங்கேற்கும் போட்டி விவரம் வருமாறு :

லாவ்ன் பவுல்ஸ் போட்டி, (இந்திய நேரப்படி மாலை 5.30) டேபிள் டென்னிசில் (மாலை 6.30 மணி) ஆண்கள் அணி தகுதிச்சுற்று, பெண்கள் அணி தகுதிச் சுற்றில் இந்தியா விளையாடுகிறது. 

பெண்கள் ஹாக்கியில் மாலை 6.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இந்திய அணி கானாவுடன் மோதுகிறது. 

நீச்சல் போட்டியில் இந்தியாவின் குஷாக்ரா ராவத், ரஹரி நடராஜ், ஆஷிஷ்குமார், சஜன் பிரகாஷ் பங்கேற்கிறார்கள். 

பெண்கள் 20 ஓவர் கிரிக் கெட்டில் இந்தியா-ஆஸ்தி ரேலியா மோதுகின்றன. இப்போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. 

ஸ்குசாஷ் போட்டி மதியம் 2.30 மணிக்கு குத்துச்சண்டை போட்டி மாலை 4.30 மணிக்கும் தொடங்குகிறது. 

குத்துச்சண்டையில் இந்திய வீரர்கள் ஷிவா தாபா, ரோகித் டோகாஸ், சுமித் குண்டு, ஆஷிஷ் குமார் களம் காணுகிறார்கள். பேட்மிண்டனில் கலப்பு அணியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுகிறது. 

இப்போட்டி இரவு 11 மணிக்கு தொடங்குகிறது. 20 ஓவர் போட்டித்தொடர் 1-1 என்ற களத்தில் சமனில் உள்ளது. 

இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி வருகிற 31-ந்தேதி நடக்கிறது.
*

Share this story