காமன்வெல்த் போட்டி : வரலாறு படைத்த இந்திய வீராங்கனைகள் ஆனந்தக்கண்ணீர்..

common5

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

இந்தியா இதுவரை மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது. 

4-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். 

இந்நிலையில், லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்து வரலாறு படைத்துள்ளது. 

இதன் மூலம், காமன்வெல்த் தொடரில் லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளது. 

லவ்லி சௌபே , பிங்கி, நயன்மோனி சைகியா மற்றும் ரூபா ராணி டிர்கி அடங்கிய இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றனர். 

இந்த போட்டியில், இந்திய பெண்கள் அணி 16-13 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. இந்திய அணி இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 

வரலாறு படைத்த இந்திய அணி வீராங்கனைகள் ஆனந்த கண்ணீர் மூலம், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
*

Share this story