காமன்வெல்த் போட்டி : தங்கம் வென்றார் சுதிர்; இந்திய வெற்றி விவரம்..

By 
common8

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது. இதில் இந்தியா இதுவரை 5 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்றுள்ளது. 

7-வது நாளில் பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். 

இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 6-வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. பாரா பளுதூக்குதல் ஆடவர் பிரிவில் 134.5 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார் சுதிர். 

134.5 புள்ளிகளைப் பெற்றது என்பது புதிய உலக சாதனை ஆகும். 

இதன்மூலம், இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.
*

Share this story