காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி : தமிழக வீராங்கனை நீக்கம்..
 

thanalakshmi

காமன்வெல்த் விளையாட்டு போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடக்கிறது. 

இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழ்நாடு தடகள வீராங்கனை தனலெட்சுமி (100 மீட்டர் மற்றும் தொடர் ஓட்டம் )இடம் பெற்றிருந்தார். 

இந்நிலையில், ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால், தமிழ்நாடு வீராங்கனை தனலட்சுமி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் கோப்பை தொடரில், தனலட்சுமி 200 மீட்டர் தூரத்தை 23 புள்ளி 26 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

இதன் மூலம் 23 ஆண்டுகள் பி.டி. உஷாவின் சாதனையை தனலட்சுமி தகர்த்து எறிந்தார்.

அந்த தொடரில் ஹிமா தாஸ், டுடி சந்த் ஆகிய 2 நட்சத்திர வீராங்கனைகளையும் தனலட்சுமி வீழ்த்தினார்

Share this story