காமன்வெல்த் டுடே : தங்கம் வென்றார், இந்திய சிங்கப்பெண் பவினா..
 

bavina2

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 72 நாடுகள் பங்கேற்றுள்ளன. 

இதில், பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பவினா படேல், நைஜீரிய வீராங்கனை இஃபேச்சுக்வுடே இக்பியோவை எதிர்கொண்டார். 

இப்போட்டியில் 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பவினா படேல் தங்கப்பதக்கம் வென்றார். 

இதன் மூலம், இந்தியா காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை 13 தங்கம் வென்றுள்ளது.

2021-ல், உலகின் நெ.9 வீராங்கனையை முதலில் தோற்கடித்தார்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் நெ.8 வீராங்கனையைத் தோற்கடித்தவர், காலிறுதியில் ரியோ போட்டியில் தங்கம் வென்ற உலகின் நெ.2 வீராங்கனையை வென்று அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
*

Share this story