கிரிக்கெட் 'கெத்து' : கோலி சாதனையை முறியடிக்கிறார் ரோகித்..

By 
rohit and kohli

15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது.

2-வது போட்டியில் 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. நேற்று நடந்த 3-வது 'லீக்' ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.

2 வெற்றி மூலம் ஆப்கானிஸ்தான் அணி 'சூப்பர்4' சுற்றுக்கு முன்னேறியது. வங்காளதேசம்-இலங்கை அணிகள் நாளை மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 'பி' பிரிவில் இருந்து 'சூப்பர்4' சுற்றுக்கு தகுதி பெறும் 2-வது அணியாக இருக்கும். துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 3-வது 'லீக்' ஆட்டத்தில் இந்தியா-ஆங்காங் அணி கள் மோதுகின்றன.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் செயல்பாடு அந்த ஆட்டத்தில் சிறப்பாக இருந்தது. பலவீனமான ஆங்காங்குக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்று 'சூப்பர் 4' சுற்றுக்கு செல்லும் ஆர்வத்தில் உள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், ரோகித் சர்மா 20 ஓவர் சர்வதேச போட்டியில் அதிக வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ள இந்திய கோப்டன்களில் வீராட் கோலி சாதனையை முறியடிப்பார். வீராட் கோலி 50 ஆட்டத்துக்கு கேப்டனாக இருந்து 30 வெற்றியை பெற்றுள்ளார். 16 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 2 ஆட்டம் முடிவு இல்லை. 2 போட்டி 'டை' ஆனது.

ரோகித் சர்மா 36 போட்டியில் 30 வெற்றி பெற்று சமநிலையில் உள்ளார். 6 ஆட்டத்தில் மட்டுமே தோல்வி ஏற்பட்டது. ஆங்காங்கை வீழ்த்தினால் ரோகித் சர்மா 31 வெற்றியுடன் 2-வது இடத்துக்கு முன்னேறுவார். கோலி 3-வது இடத்துக்கு பின் தங்குவார். டோனி 72 போட்டியில் 41 வெற்றியுடன் முதல் இடத்தில் உள்ளார். அவரது தலைமையில் 28 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 2 ஆட்டம் முடிவில்லை.

ஒரு போட்டி 'டை' ஆனது. ஆனால் வெற்றி சதவீதத்தை பொறுத்த வரை ரோகித் சர்மா தான் முன்னிலையில் இருக்கிறார். அவர் 83.33 சதவீதத்துடன் உள்ளார். டோனியின் வெற்றி சதவீதம் 59.28 ஆகவும், வீராட் கோலிக்கு 64.58 ஆகவும் இருக்கிறது

Share this story