கிரிக்கெட் 'கெத்து' : ராகுல் டிராவிட் சாதனையை முறியடித்தார் விராட்கோலி; எப்டின்னா..

virat10

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய இந்தியா விராட் கோலி, சூர்யகுமார் யாதவின் அதிரடியால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 48 பந்துகளில் 63 ரன்கள் அடித்தார்.

இதன்மூலம் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்தார். இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி, ராகுல் டிராவிட்டை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுகல்கர் முதல் இடத்தில் உள்ளார். இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல் பின்வருமாறு:

சச்சின் டெண்டுல்கர் - 664 போட்டிகள் - 34,357 ரன்கள்

விராட் கோலி - 471 போட்டிகள் - 24,078 ரன்கள்

ராகுல் திராவிட் - 404 போட்டிகள் - 24,064 ரன்கள்

கங்குலி - 421 போட்டிகள் - 18,433 ரன்கள்

எம்.எஸ்.தோனி - 535 போட்டிகள் - 17,092 ரன்கள்

*

Share this story