கிரிக்கெட் டென்ஷன் : அக்சர் பட்டேல் மீது, கேப்டன் ஆரோன் பிஞ்ச் காட்டம்..
 

t20c

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2 டி20 போட்டி நடைபெற்றது. நேற்று போட்டிக்கு முன்பாக பெய்த பலத்த மழை காரணமாக போட்டி தாமதமாக துவங்கியது.

அதனால் போட்டியானது 8 ஓவர்கள் வரை மட்டுமே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பந்து வீசிய இந்திய அணியானது மிகச் சிறப்பாக பந்துவீசி 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 90 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தது.

இதனையடுத்து 91 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 7.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 92 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பிஞ்ச் கூறுகையில் :

நாங்கள் போட்டி ஐந்து ஓவர் வரை தான் நடைபெறும் என்று நினைத்தோம். ஆனால் கூடுதலாக மூன்று ஓவர் அதிகமாக வழங்கப்பட்டது. இந்த போட்டிக்கான திட்டங்கள் எங்களிடம் சரியாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

ரோகித் சர்மா மிகச்சிறப்பாக பேட்டிங் செய்தார். அதேபோன்று இந்திய அணியின் பவுலரான அக்சர் பட்டேல் வீசிய இரண்டு ஓவர்கள் இந்த போட்டியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தின. அவருடைய பந்துவீச்சு எங்களது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

எங்களது அணி சார்பாக மேத்யூ வேட் மிகச் சிறப்பாக விளையாடினார். அதேபோன்று ஆடம் ஜாம்பா எங்கள் அணியில் மிகச் சிறப்பாக பந்து வீசினார். இவ்வாறு ஆரோன் பிஞ்ச் கூறினார்.
 

Share this story