கிரிக்கெட் டுடே : 10 விக்கெட் வித்தியாசத்தில், இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டியை கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
அதன்படி, இரு அணிகளும் மோதிய முதல் டி20 கிரிக்கெட் போட்டியானது நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கியது இலங்கை அணி. தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
128 ரன்கள் :
12 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்த அந்த அணியின் நடுவரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், ரன்கள் எடுக்க தடுமாறியது.
இதனால, இலங்கை 19.3 ஓவர்களில் 10 விக்கெட் இழந்து 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 129 ரன்கள் இலக்குடன் விளையாடியது.
ஆஸ்திரேலிய அணி 11.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 101 ரன்கள் எடுத்திருந்த போது போட்டியின் குறுக்கே திடீரென மழை பெய்தது.
இதனால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மழை நின்றதும் மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஜோடியை பிரிக்க இலங்கை பந்துவீச்சாளர்கள் பல்வேறு யுக்திகளை பயன்படுத்தியும் எதுவும் பலனளிக்காமல் போனது.
வார்னர் 70 ரன்கள் :
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 14 ஓவர்களிலேயே இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டேவிட் வார்னர் 70 ரன்களுடனும், ஆரோன் பின்ச் 61 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி, இதே மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது
*