கிரிக்கெட் டுடே : 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அதிரடி வெற்றி; ஆடுகள விவரம்..

By 
nathan

ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் முதல் டெஸ்ட்டில் விளையாடி வருகின்றனர். 

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் 59 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

321 ரன்கள் :

இதனையடுத்து, முதல் இன்னிங்சை ஆஸ்திரேலியா தொடங்கியது. 

ஆஸ்திரேலியா அணி 70.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 321 ரன்கள் எடுத்தது. 

இதனால், ஆஸ்திரேலியா அணி 109 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. 

நாதன் லயன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி 113 ரன்னில் சுருண்டது. 

இதனால், 4 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி ஆடியது. 

10 விக்கெட் :

4 பந்துகள் மட்டுமே சந்தித்த ஆஸ்திரேலியா 10 ரன்கள் எடுத்தது. இதில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் அடங்கும். இதனால் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இரண்டும் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.
*

Share this story