கிரிக்கெட் டுடே : 10 விக்கெட் வித்தியாசத்தில், தெறிக்கவிட்டது இந்தியா.. அதிரடி விவரம்..

india7

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 25.2 ஓவரில் 110 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 

அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 30 ரன்னும், டேவிட் வில்லி 21 ரன்னும்எடுத்தனர். முன்னணி வீரர்களான ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் ஆகியோர் டக் அவுட்டாகினர். இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆடினர். 

தவான் நிதானமாக ஆட ரோகித் சர்மா அதிரடியில் இறங்கினார். அரை சதம் கடந்த அவர் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். 

இறுதியில், இந்தியா 18.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா76 ரன்னும், ஷிகர் தவான் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். 

இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
*

Share this story