கிரிக்கெட் டுடே : இங்கிலாந்து அதிரடி ஆட்டம்; 118 ரன்னில் சுருண்டது தென்ஆப்பிரிக்கா  

rapin

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றன.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 36.2 ஓவரில் 118 ரன்னில் சுருண்டது.

அந்த அணியின் ஜேன்சன் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன் 5 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அதிகபட்சமாக ஒல்லி போப் 67 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ஜேன்சன் 4 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Share this story