கிரிக்கெட் டுடே : இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், தொடரை கைப்பற்றியது இந்தியா; ரன்ஸ் விவரம்..

eng1

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி,  பர்மிங்காமில் நடைபெற்றது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் தேர்வு செய்தார். 

அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. 

பொறுப்புடன் ஆடிய ரவீந்திர ஜடேஜா 46 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ரோகித் சர்மா 31 ரன்னும், ரிஷப் பண்ட் 26 ரன்னும் எடுத்தனர். 

இங்கிலாந்து சார்பில் ஜோர்டான் 4 விக்கெட், கிலீசன் 3 விக்கெட் வீழ்த்தினர். 

35 ரன் :

இதையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. 

ஆரம்பம் முதலே இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி முன்னணி வீரர்களை வெளியேற்றினர். 

அந்த அணியில் அதிகபட்சமாக மொயீன் அலி 35 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர். 

கடைசிக் கட்டத்தில், டேவிட் வில்லி அதிரடியாக ஆடி 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இறுதியில், இங்கிலாந்து அணி 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

49 ரன்கள் வித்தியாசம் :

இதன்மூலம், இந்தியா 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியுள்ளது. 

இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட், பும்ரா, சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
*

Share this story