கிரிக்கெட் டுடே : வங்காளத்தை வதைத்து, இந்திய அணி வாகை; ஆடிய பெண்கள் ஆட்டம்..
Sun, 9 Oct 2022

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - வங்களா தேச அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக ஷபாலி வர்மா 55 ரன்கள் அடித்தார். 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் அணி களமிறங்கியது.
45 ரன்கள் வரை விக்கெட்டை இழக்காத அந்த அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். பேட்டிங்கில் அரை சதம் விளாசிய ஷபாலி வர்மா பந்து வீச்சிலும் அசத்தினார்.
4 ஓவர்கள் பந்து வீசி 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.