கிரிக்கெட் டுடே : பாகிஸ்தான் சாதனையை, ஓவர்டேக் செய்கிறது இந்திய அணி?

t205

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. 

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. 

அதனை தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. 

இந்த போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றால், பாகிஸ்தான் அணியின் முக்கிய சாதனை ஒன்றை டி20 கிரிக்கெட்டில் சமன் செய்யும் மிகப்பெரிய வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது. 

இதுவரை இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 21 டி20 போட்டிகளில் விளையாடி 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

அதே வேளையில் பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 21 டி20 போட்டிகளில் விளையாடி 15 வெற்றிகளை பெற்றுள்ளது. 

எனவே, இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 15 வெற்றிகளை பெற்று, இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணியும் இந்த சாதனையை சமன் செய்யும். 

இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக, அதிக வெற்றிகளை பெற்ற அணியாக இந்த சாதனை பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்தினை பிடிக்கும். 

அதே வேளையில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற அணியாக இந்திய அணி தான் இந்த பட்டியலிலும் முதலிடம் வகிக்கிறது. 

டி20 கிரிக்கெட்டினை பொறுத்தவரை இந்திய அணியானது இலங்கை அணிக்கு எதிராக மட்டும் டி20 கிரிக்கெட்டில் 17 முறை வெற்றிகளை பெற்றுள்ளது. 

அதேபோன்று, இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 16 வெற்றிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
*

Share this story