கிரிக்கெட் அதிரடி : டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா; ரன்ஸ் விவரம்..

indiawin2

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் சேர்த்தது. 

சூர்யகுமார் யாதவ் 112 ரன்கள் விளாசினார். இலங்கை தரப்பில் தில்சன் 2 விக்கெட் எடுத்தார். கசுன் ரஜிதா கருணாரத்னே, ஹசரங்கா டி சில்வா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 137 ரன்களில் சுருண்டது. இதனால் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இலங்கை அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ், தசுன் சனகா தலா 23 ரன்கள் அடித்தனர். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஹர்திக் பாண்ட்யா, உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாகல் தலா 2 விக்கெட் எடுத்தனர். 

3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 2 ரன்னில் வெற்றி பெற்றது. புனேயில் நடந்த 2-வது போட்டியில் இலங்கை அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன்மூலம் தொடரை 2-1 என கைப்பற்றி உள்ளது.

 

Share this story