பிரபல நடிகையுடன் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் காதல் திருமணம் : தேதி அறிவிப்பு..

rahul45

காதலியை கரம்பிடிக்கும் கேஎல் ராகுல்- திருமணம் தேதியை சூசகமாக அறிவித்த சுனில் ஷெட்டிபிரபல பாலிவுட் வில்லன் நடிகரின் மகளை காதலித்து வரும் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், தற்போது திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரராக இருந்து வருபவர் கே.எல்.ராகுல். கர்நாடகாவை சேர்ந்த இவர் தொடர்ந்து பல்வேறு காதல் வதந்திகளில் சிக்கி உள்ளார்.

கே.எல்.ராகுல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை நிதி அகர்வால் உடன் டேட்டிங் செய்து வந்தார். இதைவைத்து அவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவின. பின்னர் ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இதையடுத்து கே.எல்.ராகுல் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியுடன் நெருங்கி பழகி வந்தார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சுனில் ஷெட்டியின் மகள் தான் அதியா ஷெட்டி. கே.எல்.ராகுல் உடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, அவருடன் ஜோடியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என இருந்து வந்த அதியா ஷெட்டி, கடந்த ஆண்டு தங்கள் இருவரும் காதலிப்பதை உறுதி செய்தார்.

இந்நிலையில், தற்போது இந்த ஜோடியின் திருமணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அதியா ஷெட்டி - கே.எல்.ராகுல் ஜோடியின் திருமணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

மும்பையில் உள்ள சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் தான் இவர்களது திருமணம் நடக்க இருக்கிறதாம். இதுகுறித்த சூசகமான அறிவிப்பை நடிகர் சுனில் ஷெட்டியும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

பட விழா ஒன்றில் கலந்துகொண்ட சுனில் ஷெட்டியிடம் உங்கள் மகளின் திருமணம் எப்போது என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு இன்னும் மூன்று மாதங்களில் திருமணத்திற்கு உங்களை அழைப்பேன் என நினைக்கிறேன் என கூறி இருக்கிறார்.

இதன்மூலம் கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் ஜனவரி மாதம் நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

Share this story