கிரிக்கெட் இன் சூப்பர் ஓவர் : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இந்தியா 'த்ரில்' வெற்றி : செம ஆட்டம் ஸ்மிருதி மந்தனா..

By 
smiriti

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, அலிசா ஹீலி தலைமையிலான உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது.

இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது டி20 போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை மூனி 82 ரன்னும், மெக்ராத் 70 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடினார். அவர் 49 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 34 ரன்னும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 21 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ரிச்சா கோஷ் 13 பந்தில் 3 சிக்சர் உள்பட 26 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் உள்ளார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்தியா 13 ரன்களை எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது.

முதலில் ஆடிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 2 சிக்சர் உள்பட 20 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 16 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் இந்திய அணி டி20 தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

Share this story