எனது வளர்ச்சிக்கு பெரிதும் உதவியவர் யார் தெரியுமா? : இஷான் கிஷன் பேச்சு

ஆரம்ப காலங்களில் தன்னுடைய வளர்ச்சிக்கு ஹர்திக் பாண்ட்யா உதவியதாக இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, 2016 ஆம் ஆண்டு இஷான் கிஷனை ஏலத்தில் எடுத்தது.
வாய்ப்பு மறுப்பு :
ஆரம்ப காலங்களில், அவருக்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
2020 ஆம் ஆண்டு தான் அவர் 516 ரன்கள் விளாசி, ஐபிஎல் தொடரில் உச்சம் தொட்டார்.
அதன் பின்னர், மும்பை அணியின் முக்கிய வீரராக இஷான் கிஷன் தற்போது விளங்குகிறார்
மும்பை அணியில் சேர்ந்தபோது, இஷான் கிஷன் அணியின் மற்ற வீரர்கள் கடைப்பிடிக்கும் உணவு முறைகளை பின்பற்றாததாலும், உடற்பயிற்சியில் கவனம் செலுத்தாமல் இருந்ததாலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக ஆரம்ப காலங்களில் தகவல் வெளியானது.
பெரிய உதவி :
இந்நிலையில் தற்போது இஷான் கிஷன் கூறுகையில், 'ஒரு வீரருக்கான விதிமுறைகளை நான் முறையாக கடைபிடிக்காத வரையில், நான் அணியில் விளையாடுவதற்கு தேர்வு செய்யமுடியாது' என ஹர்திக் பாண்ட்யா என்னிடம் கூறினார்.
அதே நேரத்தில் உடற்பயிற்சி எப்படி செய்வது, உடலை எப்படி கட்டுக்கோப்பாக வைத்திருப்பது என்பது குறித்து ஹர்திக் பாண்ட்யா எனக்கு பாடம் எடுத்தார். குர்னல் பாண்ட்யாவும் எனக்கு நிறைய உதவினார்.
எனக்கு தெரியாத பல விஷயங்களை அவர்கள் தான் எனக்கு கற்றுக் கொடுத்தனர். என்னுடைய வளர்ச்சிக்கு ஹர்திக் பாண்ட்யா பெரிதும் உதவினார்' என தெரிவித்துள்ளார்.
.
இந்த வருட ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை அணி இஷான் கிஷனை 15 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து எடுத்தது குறிப்பிடத்தக்கது.
*