எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா? : ராயப்பேட்டையில் ருதுராஜ் பேச்சு 

ruthu
 

* சென்னை, ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஆடம்பர கேளிக்கை விடுதி ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

'சென்னைக்கு மீண்டும் வருவது மகிழ்ச்சி. சென்னை எப்போதும் தனக்கு அன்பையும் ஆதரவையும் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். சென்னையில் கிடைக்கும் உணவு தனக்கு மிகவும் பிடிக்கும் .

கிரிக்கெட் வீரர்களிலேயே தனக்கு மிகவும் பிடித்தவர் டோனி. நான் கிரிக்கெட் வீரராகாமல் இருந்திருந்தால், டென்னிஸ் வீரராகியிருப்பேன். எனக்கு டென்னிஸ் விளையாடுவது ரொம்ப பிடிக்கும். என தெரிவித்தார்.

* ஆஸ்திரேலியா சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று தொடங்கியது. இது பகல்-இரவு போட்டியாகும்.

முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 89 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்துள்ளது. லபுசேன் 120 ரன்னும், டிராவிஸ் ஹெட் 114 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 199 ரன்கள் சேர்த்துள்ளது.

*


 

Share this story