விளையாட்டு வீரர்களுக்கு, ஓய்வூதியம் இருமடங்கு அதிகரிப்பு..
Sun, 7 Aug 2022

தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், இரு மடங்காக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
விளையாட்டு வீரர்கள் தங்களின் இளமைக் காலத்தில், வெற்றியை குவிப்பதாகவும், தங்களின் வலிமையும் ஆற்றலும் பெருந்திய காலத்தை நிறைவு செய்த பிறகு சாதனைகளை அங்கீகரித்து, ஓய்வூதியம் வழங்கப்படுவதாகவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுவதாகவும்,
இனி அந்த ஓய்வூதியம் 6,000 ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.