பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி : அரைஇறுதியிலும் தெறிக்க விடுமா இந்திய அணி?

french

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், நாளை நடைபெறும் அரை இறுதிப் போட்டியில் போபண்ணா ஜோடி, நெதர்லாந்தின் ரோஜர் - எல் சால்வடாரின் மார்சிலோ அரிவலோ ஜோடியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியை, ரசிகர்கள் மிக ஆவலாய் எதிர்பார்க்கிறார்கள்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில், ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்று நடைபெற்றது. 

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில், இந்தியாவின் ரோகன் போபண்ணா - மேத்வி மிட்டெல்கூப் (நெதர்லாந்து) ஜோடி 4-6, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் லாய்டு கிளாஸ்பூல் - பின்லாந்தின் ஹாரி ஹெலியோவாரா இணையை வீழ்த்தியது.

இதன்மூலம், போபண்ணா ஜோடி அரை இறுதிக்குள் நுழைந்தது.
*

Share this story