பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : 22-வது பட்டம் வென்று, ரபேல் நடால் மெகா சாதனை

nadal1

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. 

இதில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், நார்வே வீரர் கேஸ்பர் ரூட் ஆகியோர் மோதினர். 

துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-3, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் 14-வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். 

அத்துடன், இது அவருக்கு 22-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். 

இந்த மாபெரும் சாதனை படைத்த ரபேல் நடால், இது தொடர்பாக கூறியதாவது :

'பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில், மிகச்சிறந்த வீரர் கேஸ்பருடன் விளையாடியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

அவர் சிறந்த சாதனையாளர். அவரது சாதனைகளுக்காக, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்' என நடால் குறிப்பிட்டார்
*

Share this story