பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி : மெத்வதேவ் மேலும் முன்னேற்றம்..

medvedev

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. 

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்றுப் போட்டி ஒன்றில், உலகின் 2-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ், அர்ஜென்டினாவின் ஃபகுண்டோ பாக்னிஸை எதிர்த்து விளையாடினார்.

இதில், மெத்வதேவ் 6-2, 6-2, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 
 
இதேபோல், இத்தாலியை சேர்ந்த ஜானிக் சின்னர், அமெரிக்காவைச் சேர்ந்த பிரெடஞ்சலோவை எதிர்கொண்டார். 

இதில் 6-3, 6-2, 6-3 என்ற செட்களில் சின்னர் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
*

Share this story