கோலி-கும்ப்ளே பழைய மோதல் விவகாரம் : வினோத் ராய் மூலம் வெளிவந்தது உண்மை..

கோலி- கும்ப்ளே விவகாரம் குறித்து வினோத் ராய் எழுதிய புத்தகத்தின் மூலம் உண்மை வெளிவந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்தவர் அனில் கும்ப்ளே. இவர் தலைமைப் பயிற்சியாளராக இருந்தபோது, விராட் கோலி கேப்டனாக இருந்தார்.
கடும் மோதல் :
அந்த சமயத்தில், இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக்குழு நிர்வகித்தது.
அந்த நேரத்தில், அனில் கும்ப்ளே - விராட் கோலி இடையே கடும் மோதல் போக்கு நிலவியது.
அனில் கும்ப்ளேவை தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று விராட் கோலி தெரிவித்ததாக வினோத் ராய் அப்போது கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின்னர், கும்ப்ளே பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விலகினார்.
அதன்பின்னர் தான் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
புத்தகம் வெளியீடு :
இந்நிலையில், அப்போது பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவராக இருந்த வினோத் ராய், தற்போது தான் எழுதிய ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புத்தகத்தில் அவர் கோலி - கும்ப்ளே விவகாரம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
கோலி - கும்ப்ளே சர்ச்சை குறித்து எழுதியுள்ள வினோத் ராய், 'அனில் கும்ப்ளே அளவுக்கு அதிகமான ஒழுக்க கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும்,
அதனால், அவரைக்கண்டு இளம் வீரர்கள் அஞ்சி நடுங்குவதாகவும் கோலி குற்றம்சாட்டினார்.
கோரிக்கை :
கேப்டனும் அணி நிர்வாகத்தினரும் கும்ப்ளேவின் அதீத ஒழுக்க கட்டுப்பாடுகளால் அதிருப்தியில் இருப்பதாக கூறினர். அதனால், அவரை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்று கோலி கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து இங்கிலாந்திலிருந்து திரும்பியதும், அனில் கும்ப்ளேவிடம் பேசினோம்.
கேப்டனுக்கும் அணி வீரர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததாகவும், தான் நடத்தப்படும் விதம் குறித்து அதிருப்தியும் தெரிவித்தார் கும்ப்ளே.
ஒரு சீனியராக ஒழுக்கத்தையும் தொழில்முறையையும் வீரர்களுக்கு கற்பிப்பது என் கடமை.
எனது கருத்துகளுக்கு வீரர்கள் மதிப்பளிக்க வேண்டும். ஆனால், அது எதுவுமே நடக்காதது குறித்து கும்ப்ளே வருத்தம் தெரிவித்தார்' என வினோத் ராய் குறிப்பிட்டுள்ளார்.