கோலியும், ரோகித்தும் மோசமாக விளையாடுகிறார்கள் : கங்குலி கருத்து

ganguli ipl

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஐபிஎல்லின் வலிமையான அணியாக கருத்தப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோசமாக விளையாடி வருகின்றன. 

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா சொற்ப ரன்களுக்கு அனைத்து போட்டிகளிலும் வெளியேறி வருகிறார்.

அதேபோல, ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் விராட் கோலியும் சொற்ப ரன்களில், சில சமயம் டக் அவுட் ஆகி வெளியேறி வருகிறார். இருவரும் ரன்கள் குவிக்க வேண்டும் என விரும்பும் ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் அளிக்கிறது. 

இந்நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் மோசமாக விளையாடுவது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
 
‘இருவரும் சிறந்த வீரர்கள். விரைவில் இருவரும் ஃபார்முக்கு திரும்பி விளையாடுவார்கள், அதிக ரன்களை அடிக்க தொடங்குவார்கள் என நம்புகிறேன். 

விராட் கோலியின் தலையில் என்ன சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது என தெரியவில்லை. 

ஆனால், தனது மோசமான ஃபார்மில் இருந்து அவர் மீண்டு வருவார்’ என தெரிவித்துள்ளார்.

அதுபோல, ஐபிஎல் அணிகள் குறித்து பேசிய கங்குலி, அனைத்து அணிகளும் மிக சிறப்பாக விளையாடி வருகின்றன. எந்த அணி வேண்டுமானலும் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. 

குறிப்பாக குஜராத் டைடன்ஸ், லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகளும் மிக சிறப்பாக விளையாடி வருகின்றன' என்றார்.
*

Share this story