ஒரே நிமிடத்தில், கைகளால் 148 தேங்காய் உடைத்து கின்னஸ் சாதனை : வைரல் பதிவு..
 

record2

ஜெர்மனி நாட்டை சேர்ந்த தற்காப்புக் கலைஞர் ஒருவர், ஒரே நிமிடத்தில் கைகளால் 148 தேங்காய்களை உடைத்து 6-வது முறையாக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 

முஹம்மது கஹ்ரிமனோவிக் என்ற அந்த நபர், ஒரு நிமிடத்தில் கைகளால் அதிக தேங்காய்களை உடைத்து 5 முறை கின்னஸ் சாதனை படைத்து இருந்தார். 

இந்நிலையில், அவர் மீண்டும் கைகளால் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த 148 தேங்காய்களை உடைத்துள்ளார். இதன் மூலம் அவர் 6-வது முறையாக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 

அதுவும் குறிப்பாக ஒவ்வொரு தேங்காயையும் ஒரு கையால் அடித்து உடைத்து இருக்கிறார். 

ஆனால், இரு கைகளையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்தி தேங்காய்களை உடைத்து அவர் சாதனை படைத்துள்ளார். 

இத்தாலிய தொலைக்காட்சி தொடரான லோ ஷோ டீ ரெக்கார்டின் மிலன் தொகுப்பில் 6-வது முறையாக அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். 

இது குறித்த வீடியோவை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் தங்கள் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
*

Share this story