ஐபிஎல் கோப்பையுடன் குஜராத் அணி, வெற்றி ஊர்வலம் : ரசிகர்கள் ஆரவாரம்..
Tue, 31 May 2022

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இதில், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இதில், குஜராத் டைட்டன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில், முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் அணியினர் குஜராத் தலைநகர் காந்தி நகரில் வெற்றிக் கோப்பையை ஊர்வலமாக சென்றனர்.
கோப்பையுடன் சென்ற வண்டியில், குஜராத் அணி வீரர்கள் உடனிருந்து வெற்றி கோஷங்களை எழுப்பினர். வழியெங்கும் ரசிகர்கள் ஆரவாரமாக கோஷமிட்டனர்.
*