வாழ்க்கையில் அனைத்தையும் சாதித்துவிட்டாரா கோலி? : சாதிக் அப்ரிடி கேள்வி

கிரிக்கெட் வரலாற்றில் முன்னணி ஜாம்பவான்களுள் ஒருவராக கருதப்படுபவர் விராட் கோலி.
இந்திய அணிக்காக இவர் படைத்த சாதனைகள் எண்ணில் அடங்காதவை.
'கிரிக்கெட்டின் கடவுள்' என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்ற அளவிற்கு அவருடன் ஒப்பிடப்பட்டு பேசப்பட்டவர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவர் சதம் அடிக்காதது அவரது ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது மட்டுமின்றி, கிரிக்கெட் அரங்கில் முக்கிய பேசுபொருளாக உள்ளது.
அணுகுமுறை என்ன?
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி விராட் கோலியின் பேட்டிங் அணுகுமுறை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். விராட் கோலி குறித்து, அப்ரிடி பேசியதாவது :
'கிரிக்கெட்டில் அணுகுமுறை மிகவும் முக்கியமானது.
கிரிக்கெட் மீதான அணுகுமுறை கோலிக்கு இருக்கிறதா இல்லையா? கோலி, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில், உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருக்க விரும்பினார்.
அதே உத்வேகத்துடன் அவர் இன்னும் கிரிக்கெட் விளையாடுகிறாரா? என்பதுதான் பெரிய கேள்வி. அவரிடம் அதீத திறமை உள்ளது.
ஆனால், அவர் உண்மையில் மீண்டும் நம்பர் 1 ஆக விரும்புகிறாரா? அல்லது வாழ்க்கையில் அனைத்தையும் சாதித்துவிட்டதாக நினைக்கிறாரா?. இது அனைத்தும் அவரது அணுகுமுறையை பற்றியது' என்றார்.
*