'அவர்' இப்படி வந்து அதிரடியாய் ஆடுவார் என எதிர்பார்க்கவில்லை : ரோகித் சர்மா

ipl16

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன், கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

இந்த தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

15 பந்தில் 56 ரன்கள் :

இந்த போட்டியில் கொல்கத்தா அணி  5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

கொல்கத்தா அணி வீரர் கம்மின்ஸ் 15 பந்துகளில் 56 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இந்த போட்டியில் அவர் 14 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் கே.எல். ராகுல் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மகிழ்ச்சி் :

இந்நிலையில், இது குறித்து கம்மின்ஸ் கூறுகையில் ;

இந்த  இன்னிங்ஸால் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன் என்று  நினைக்கிறேன். இது போன்ற இன்னிங்ஸ் என்னிடம் இருந்து வெளிவந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். .

இந்த சீசனில் எனது முதல் ஆட்டத்தில் இதை செய்ததில் மிகவும் திருப்தியாக இருக்கிறது.  , கடந்த ஆண்டை விட நிறைய மாற்றங்கள் உள்ளன' என்றார்.

கம்மின்ஸ் அதிரடி குறித்து, மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் ;

அவர் (கம்மின்ஸ்) இப்படி வந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கவில்லை. 

அவர் விளையாடிய விதமே  பாராட்டுக்குரியது' என்றார்.

Share this story