ஐபிஎல் தொடரில், மிகச்சிறந்த பவுலர் 'அவர்தான்' : கங்குலி பாராட்டு

ganguly

நடப்பு ஐபிஎல் தொடரில், இம்ரான் மாலிக் தொடர்ந்து ,150 கி.மீ வேகத்தில் பந்து வீசிகிறார்.

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்த தொடரில் மிகச்ச சிறப்பாக பந்துவீசி வரும் பந்து வீச்சாளர்களில் ஒருவராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சேர்ந்த உம்ரான் மாலிக் இருக்கிறார். 

இந்த தொடரில், உம்ரான் மாலிக் இதுவரை 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

இதில், 5 விக்கெட்டுகளை குஜராத் டைடன்ஸுக்கு எதிரான சன் ரைசர்ஸின் கடைசி போட்டியில் எடுத்தார். 

இதன் மூலம், இந்த தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் 3வது இடத்தில் உம்ரான் மாலிக் இருக்கிறார். இவர் தொடர்ந்து 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி வருவது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், இந்த தொடரில் கண்டறியப்பட்ட சிறந்த முகம் என உம்ரான் மாலிக் தான் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார்.
*

Share this story