"அவருக்கு" தேவை அன்பும் ஊக்கமும்தான் : 'கோச்சர்' ரிக்கி பாண்டிங் தகவல்

கடந்து 3 வருடங்களுக்கு முன்புவரை, இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக விளங்கியவர் குல்தீப் யாதவ்.
கொல்கத்தா அணிக்காக இதற்கு முன் விளையாடி வந்த அவர், நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.
கொல்கத்தா அணியில் வருண் சக்ரவர்த்தி மற்றும் சுனில் நரேன் கூட்டணி வெற்றிகரமாக செயல்படத் தொடங்கிய பின் ஓரம் கட்டப்பட்ட இவர், கடந்த சீசனில் காயம் காரணமாக விலகினார்.
பின்னர், இந்த சீசனில் இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நடப்பு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 17 விக்கெட்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில், தற்போது குல்தீப் யாதவ் குறித்து, டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
குல்தீப் குறித்து பாண்டிங் கூறுகையில், 'அவர் ஒரு அற்புதமான இளம் வீரர்.
ஏலத்திலும் கூட, அவர் எங்களின் முக்கிய வீரராக இருந்தார். குல்தீப் யாதவ் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார்.
அவருக்கு நாங்கள் நிறைய ஊக்கமும் அன்பையும் கொடுத்து வருகிறோம்' என்றார்.
*