வரலாறு முக்கியம்ல : தமிழகத்தில், மெஸ்சி ரசிகர்கள் நடனம் ஆடி கொண்டாட்டம்..

messi

பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சம்பியனானது. லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி உலக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது.

இதையடுத்து, அர்ஜென்டினாவுக்கு உலகக்கோப்பையும், பதக்கம், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. உலகக்கோப்பையை அர்ஜென்டினா கேப்டனும் நட்சத்திர வீரருமான மெஸ்சி பெற்றுக்கொண்டார். கோப்பையை பெற்ற மெஸ்சி தனது அணி வீரர்களுடன் சேர்ந்து உற்சாகமாக கொண்டாடினார்.

பெனால்டி ஷூட்-அவுட் முறையில் அர்ஜென்டினா வெற்றிபெற்றதை உலகம் முழுவதிலும் இருந்த கால்பந்து ரசிகர்கள் கொண்டாடினர். உலகக்கோப்பை கால்பந்து கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினாவுக்கும், மெஸ்சிக்கும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வெல்வது இது 3-வது முறை ஆகும்.

இதற்கு முன் 1978 மற்றும் 1986-ம் ஆண்டுகளில் கோப்பையை அர்ஜென்டினா வென்றுள்ளது. இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பின் அர்ஜென்டினா மீண்டும் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் கோப்பையை வெல்லவேண்டும் என்ற லியோனல் மெஸ்சியின் கனவு நனவானது. அர்ஜென்டினா வெற்றி, மெஸ்சி கோப்பையை கைப்பற்றியதை உலகம் முழுவதிலும் இருந்த கால்பந்து ரசிகர்கள் கொண்டாடினர். தமிழகத்தில், மெஸ்சி ரசிகர்கள் நடனம் ஆடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
 

Share this story