ஹாக்கி தர்பார் : ஜப்பானை வீழ்த்தி, இந்தியா அபார வெற்றி

By 
hockey

11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. 

8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் இந்தியா, 'பி' பிரிவில் மலேசியா, தென்கொரியா ஆகிய அணிகள் சூப்பர் 4 எனப்படும் 2-வது சுற்றுக்கு முன்னேறின. 

இந்த சுற்றில், ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதவேண்டும். இதன் முடிவில், டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 
 
இந்நிலையில், சூப்பர் 4 சுற்றின் முதலாவது ஆட்டத்தில் பிரேந்திர லாக்ரா தலைமையிலான இந்திய அணி ஜப்பானை இன்று எதிர்கொண்டது. 
 
இதில், 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திய வீரர்கள் மஞ்சித் சிங் மற்றும் பவன் ராஜ்பர் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

Share this story