ஹாக்கி டுடே : இந்திய மகளிர் அணி கலக்கல்; வெற்றிக்கொண்டாட்டம்
 

womens2

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் நடப்பு ஆண்டுக்கான ஹாக்கி புரோ லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

இதில், மகளிர் பிரிவில், உலக தர வரிசையில் 2-வது இடம் வகிக்கும் அர்ஜெண்டினா மற்றும் இந்திய ஹாக்கி அணி ஆகியவை விளையாடின.

இதில், போட்டியின் முடிவில் இரண்டு அணிகளும் தலா 3 கோல்கள் போட்டு சமநிலையில் இருந்தன. 

இதனால், வெற்றியை முடிவு செய்யும் ஷூட் அவுட் முறைக்கு போட்டி சென்றது.

இதில், இந்திய மகளிர் அணியில் நேஹா மற்றும் சோனிகா ஆகியோர் தலா ஒரு கோல் போட்டு இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். 

முடிவில் ஷூட் அவுட் முறையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியை,  மகளிர் அணி கொண்டாடி மகிழ்ந்தனர்.

Share this story