ஹாக்கி டுடே : தமிழ்நாடு அணி வெற்றி; தொடர்கிறது ஆட்டம்..

hoc

மத்திய பிரதேச மாநிலம், போபாலில், 12-ஆவது இந்திய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி தொடர், கடந்த 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 

இப்போட்டிகளில் 27 மாநிலங்களை சார்ந்த அணிகள் கலந்து கொண்டுள்ளன. 

அரையிறுதி :

நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி, கர்நாடக அணியை 3–0 என்ற கோல் கணக்கில் வென்றது. 
 
தமிழ்நாடு அணி வீரர்கள் ஜோஷ்வா, சுந்தரபாண்டி மற்றும் சரவணகுமார் ஆகியோர் அரையிறுதி ஆட்டத்தில் தலா ஒரு கோல் அடித்தனர்.

இதனையடுத்து, இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி, ஹரியானா அணியை எதிர் கொள்கிறது. 

வாழ்த்து :

கடந்த 22 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாடு அணி இறுதி ஆட்டத்தில் பங்கு பெறுவது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், தமிழக ஹாக்கி அணிக்கு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதற்கு மாநில விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Share this story