ரிஷப் பண்டேயின் பேட்டிங் பார்ம் எப்படி? : 'கோச்சர்' ராகுல் டிராவிட் கருத்து

coach

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்ததால், ரிஷப் பண்ட் கேப்டன்சி குறித்து பலர் விமர்சனம் செய்தனர். 

இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. குறிப்பாக, அவர் கேப்டன் பொறுப்பை ஏற்ற காரணத்தால் அவர் தனது தனிப்பட்ட பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த திணறி வருவதாக விமர்சனம் எழுந்தது. 

58 ரன்கள் :

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அவர் மொத்தம் 58 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். 

இந்நிலையில், மோசமான பேட்டிங் பார்ம்ல் உள்ள ரிஷப் பண்ட் குறித்து தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார். 

பெரிய பங்களிப்பு :

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் பெரிய அங்கமாக பண்ட் இருப்பார் என்று டிராவிட் தெரிவித்துள்ளார். 

ரிஷப் பண்டேயின் உலகக்கோப்பை வாய்ப்பு குறித்து ராகுல் டிராவிட் பேசியதாவது : 

மிடில் ஓவரில் இடதுகை அதிரடி வீரர் இருந்தால் சிறப்பாக இருக்கும். 

தனிப்பட்ட முறையில், அவர் இன்னும் சில ரன்கள் எடுக்க விரும்பி இருப்பார். ஆனால், அது பெரிய பிரச்சினை இல்லை. 

அவர், அடுத்த சில மாதங்களில் எங்களின் திட்டங்களில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறார். போட்டியின் இடைப்பட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடும் வீரர்கள் தேவை. 

அப்போதுதான் அணியின் ஸ்கோரை சற்று கணிசமாக உயர்த்த முடியும். அதிரடியாக ஆட நினைத்து ஒரு சில போட்டிகளில் பண்ட் ஆட்டமிழந்து இருக்கலாம். 

ஆனால், அவர் எங்கள் பேட்டிங் வரிசையின் ஒரு அங்கமாக இருக்கிறார்' என்றார்.

Share this story