முதல் முறையாக, டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றது எப்படி? : வீராங்கனை எலீனா விளக்கம்

elina2

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர், லண்டனில் நடந்து வருகிறது. 

இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் துனீசியாவின் ஒன்ஸ் ஜபீர், கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினாவுடன் மோதினார். 

ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3 என முதல் செட்டை ஒன்ஸ் ஜபீர் கைப்பற்றினார். 

அடுத்து சுதாரித்துக் கொண்ட எலினா ரிபாகினா 6-2,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். 

இது எலினா ரிபாகினா வென்ற முதல் சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து எலினா கூறும்போது, ' வாழ்க்கையில், இந்நாள் மிகப் பெரிய மகிழ்ச்சியான நாள். 

முயற்சியும் பயிற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம்' என துள்ளலாய் கண் சிமிட்டினார்.

Share this story