மும்பை அணியின் தோல்விக்கு நானே காரணம் : கேப்டன் ரோகித் சர்மா ஒப்புதல்

ipl21

நடப்பு ஐபிஎல் போட்டியில் பெங்களூருக்கு எதிரான, மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 4-வது தோல்வியை தழுவியது. 

இந்த தோல்விக்காக, கேப்டன் ரோகித்சர்மா தன்னை தானே குற்றம் சாட்டிக்கொண்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது :

'எங்களிடம் இருக்கும் வெளிநாட்டு வீரர்களில் சிறந்த 2 பேரை தேர்ந்து எடுத்தோம். நான் முடிந்தவரை பேட் செய்ய விரும்பினேன். 
ஆனால், தவறான நேரத்தில் வெளியேறி விட்டேன். 

நாங்கள் 50 ரன் வரை பார்ட்னர்ஷிப்பில் இருந்தோம். ஆனால், தவறான மோதலில் நான் அவுட் ஆனது எங்களுக்கு வலியை ஏற்படுத்தியது.

இந்த ஆடுகளத்தில் 150 ரன் போதுமானது இல்லை என்று கண்டிப்பாகத் தெரியும். 

சூர்யகுமார் சிறப்பாக ஆடியதால்தான், இந்த ரன் வந்தது. 151 ரன்னை வைத்து பந்து வீச்சாளர்களால் ஒன்றும் செய்ய இயலாது' என்றார்.

Share this story