கிரிக்கெட்டில் இருந்து வேதனையுடன் விலகுகிறேன் : புகழ்பெற்ற வீராங்கனையின் உணர்ச்சிகர பேச்சு

By 
kath

இங்கிலாந்தின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளரான கேத்ரின் ப்ரண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

36 வயதான அவர் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் தொடர்ந்து விளையாடுவார். 

சாதனை :

இவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 14 போட்டிகளில் 21.52 சராசரி மற்றும் 51.1 ஸ்டிரைக் ரேட்டில் 51 விக்கெட்டுகளுடன், பெண்கள் டெஸ்டில் இங்கிலாந்தின் மூன்றாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். 

அவர் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரண்ட் கடைசியாக இந்த ஆண்டு ஜனவரியில் பெண்கள் ஆஷஸில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். 

புத்திசாலித்தனமான முடிவு :

ஓய்வு குறித்து கேத்ரின் ப்ரண்ட் கூறியதாவது :
'ஒரு வீராங்கனையாக விலகிச் செல்வதற்கு தெளிவான நேரம் இது இல்லை என்று நான் உணர்கிறேன். 

ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக ஓய்வு பற்றிய எண்ணங்கள் மேலும் மேலும் எழுந்தது. 

எனவே, உணர்ச்சிகரமான முடிவை விட புத்திசாலித்தனமான முடிவை எடுக்க முடிவு செய்துள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது உண்மையிலேயே வேதனை தரும் தேர்வாக இருந்தது. 

ஆனால், வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக இந்த கடினமான முடிவை எடுத்தேன்' என்றார்.

மற்றொரு இங்கிலாந்து வீராங்கனையான அன்யா ஷ்ருப்சோல் சமீபத்தில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
*

Share this story