நான் இந்த நிலையில் இருக்க, காரணமானவர்களுக்கு மிகப்பெரிய நன்றி : ரோகித்சர்மா நெகிழ்ச்சி

rohit4

இந்திய அணியின் 3 விதமான கிரிக்கெட் போட்டியிலும் கேப்டனாக தற்போது ரோகித் சர்மா செயல்பட்டு வருகிறார். 

இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 

34 வயதான ரோகித் சர்மா 2007-ல் இதே நாளில்தான் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமானார். 

இந்நிலையில் ரோகித் சர்மா தனது ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் கிரிக்கெட்டை விரும்புபவர்களுக்காக, டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். டுவிட்டர் பதிவில் ரோகித் கூறியதாவது :

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக நான் அறிமுகமாகி இன்றுடன் 15 வருடங்களை நிறைவு செய்கிறேன். 

இந்த பயணம், என் வாழ்வில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி. 

முக்கியமாக, இன்று நான் இந்த நிலையில் இருக்க காரணமாக இருந்த வீரர்களுக்கு மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

கிரிக்கெட் பிரியர்கள், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் அன்பும் ஆதரவும்தான் பல்வேறு தடைகளைத் தாண்டி, நான் இந்த நிலையில் இருப்பதற்கு காரணமாக இருக்கிறது' என அவர் கூறியுள்ளார்.
*

Share this story