ஐசிசியின், டெஸ்ட் மேட்ச் தரவரிசைப் பட்டியல் : கோலி, ரோகித், பாபர் அசாம், அஸ்வின், ஸ்ரேயாஸ் பெற்ற இடங்கள்..

By 
aswin2

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.

இதில் பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை சக வீரர் ஜஸ்பிரித் பும்ராவுடன் பகிர்ந்துள்ளார். வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்த ஏற்றம் கிடைத்துள்ளது.

பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் முதலிடத்திலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் 3-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள்.

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் 87 மற்றும் 29 ரன் வீதம் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் கிடுகிடுவென 10 இடங்கள் எகிறி 16-வது இடத்துக்கு வந்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும்.

ரிஷப் பண்ட் 6-வது இடத்திலும், ரோகித் சர்மா 9-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். மற்ற இந்திய வீரர்கள் புஜரா 19-வது இடத்திலும் (3 இடம் சரிவு), விராட் கோலி 14-வது இடத்திலும் (இரு இடம் பின்னடைவு) உள்ளனர்.

Share this story