ஐபிஎல் தர்பார் : அனுஜ் ராவத்-கோலி அதிரடியில், சுருண்டது மும்பை அணி.. ரன்ஸ் விவரம்..

By 
ipl20

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று இரவு நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும்,  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. 

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது.

சூரியகுமார் அசத்தல் :

இஷாந்த் கிஷன் 26 ரன், கேப்டன் ரோகித் சர்மா 26 ரன்னும் எடுத்தனர்.
 
அதிரடியாக ஆடிய சூரியகுமார் 37 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 68 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பெங்களூரு அணி சார்பில் ஹசரங்கா, ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அனுஜ் ராவத்- கோலி அதிரடி :

இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. 

கேப்டன் டூ பிளசிஸ், அனுஜ் ராவத் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில், டூ பிளசிஸ் 16 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து, அனுஜ் ராவத்துடன் விராட் கோலி இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. 

அனுஜ் ராவத் 66 ரன்னில் வெளியேறினார். விராட் கோலி 48 ரன்னில் அவுட்டானார்.

3-வது வெற்றி :

இறுதியில், பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. பெங்களூரு அணி பெறும் 3-வது வெற்றி இதுவாகும். 

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னையை தொடர்ந்து, மும்பை அணியும் தொடர்ச்சியாக 4 தோல்விகளைச் சந்தித்துள்ளது.

Share this story