ஐபிஎல் திருவிழா : பெங்களூருவை மிரட்டி, நிமிர்கிறது பஞ்சாப்,
கள நிலவரம்..

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 60-வது லீக் போட்டியில், பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பெங்களூரு அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.
209 ரன்கள் குவிப்பு :
முதலில், களம் இறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். மற்றொரு தொடக்க வீரர் தவான் 21 ரன்களில் ஆட்டமிழந்தார் .
பானுகா ராஜபக்சே 1 ரன்னுடன் வெளியேற லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார்.
கேப்டன் மயங்க் அகவர்வால் 19 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.
54 ரன்கள் வித்தியாசம் :
இதைத் தொடர்ந்து 210 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணியில் தொடக்க வீரராக களம் இறங்கிய கோலி 20 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
கேப்டன் டூபிளியஸ் 10 ரன்னுக்கும், பட்டிதார் 26 ரன்னுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தார். அதிகபட்சமாக, மேக்ஸ்வெல் 35 ரன்கள் அடித்தார். தினேஷ் கார்த்திக் 11 ரன்னுடன் வெளியேறினார்.
20 ஓவர் முடிவில், பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.