ஐபிஎல் திருவிழா : கேப்டன்கள் அரைசதம்; இதில், கவிழ்ந்தது குஜராத்; கலக்கியது ஐதராபாத்.. எப்டின்னா.?

By 
ipl22

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 21-வது லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. 

டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. 

அரைசதம்ஸ் :

கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அபினவ் மனோகர் 35 ரன்கள் எடுத்தார். 
 
இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் பொறுப்புடன் ஆடினர். 

அணியின் எண்ணிக்கை 64 ஆக இருக்கும்போது அபிஷேக் சர்மா 42 ரன்னில் அவுட்டானார். 

அடுத்து இறங்கிய ராகுல் திரிபாதி 15 ரன்னில் காயமடைந்து வெளியேறினார்.

கேப்டன் வில்லியம்சன் நிதானமாக ஆடி, அரை சதமடித்து 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பூரன் :

இறுதியில், ஐதராபாத் அணி 19.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. பூரன் அதிரடியாக ஆடி 34 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இது ஐதராபாத் அணி பெறும் 2-வது வெற்றி ஆகும்.

Share this story