ஐபிஎல் கெத்து : பெங்களூருவை வீழ்த்தி, மீண்டும் குஜராத் முதலிடம்.. ஆட்ட விவரம்..

By 
gt2

15-வது ஐ.பி.எல் தொடரில் நேற்று இரவு மதியம் மும்பையில் நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. 

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 170 ரன்கள் எடுத்தது. 

விராட்கோலி-ரஜத் :

விராட் கோலி, ரஜத் படிதார் ஆகியோர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். கடைசிக் கட்டத்தில் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 33 ரன்கள் எடுத்தார்.
 
குஜராத் சார்பில் பிரதீப் சங்வான் 2 விக்கெட், ஷமி, ரஷீத் கான், பெர்குசன், அல்ஜாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. 

தொடக்க ஆட்டக்காரர்கள் விருத்திமான் சஹா, ஷுப்மான் கில் ஜோடி 50 ரன்களை கடந்தது.

மில்லர்-திவாட்டியா :

சஹா 29 ரன், ஷுப்மான் கில் 31 ரன், சாய் சுதர்சன் 20 ரன், ஹர்திக் பாண்ட்யா 3 ரன்னில் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய டேவிட் மில்லர், ராகுல் திவாட்டியா ஜோடி பொறுப்புடன் ஆடியது.

இறுதியில், குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மில்லர் 39 ரன்னும், திவாட்டியா 43 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி 8 வெற்றிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
*

Share this story