ஐபிஎல் மிரட்டல் : கே.எல்.ராகுல் அசத்தல்; ரோகித் சர்மா அதிர்ச்சி.. ஆடுகள விவரம்..

By 
luck

ஐபிஎல் தொடரின் 26-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. 

டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்தது.  

கே.எல்.ராகுல் அசத்தல் :

அதிரடியாக ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தினார். அவர் 103 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ரோகித் சர்மா 6 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 

இஷான் கிஷன் 13 ரன்னிலும், பிரெவிஸ் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். திலக் வர்மா ஜோடி 26 ரன்னில் வெளியேறினார். சூர்யகுமார் பொறுப்புடன் ஆடி 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கடைசிக் கட்டத்தில் பொல்லார்டு, உனத்கட்டும் போராடினர்.  

6-வது தோல்வி :

இறுதியில், மும்பை அணி 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம், மும்பை அணி தொடர்ந்து 6 தோல்விகளை சந்தித்துள்ளது.

லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Share this story